ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்! - ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி - வீடியோ

#Protest #Gotabaya Rajapaksa
Prasu
4 years ago
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்! - ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி - வீடியோ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹாய பகுதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று (31) இரவு 7.30 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பமானது.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து அங்கு ஏராளமானோர் தங்கியுள்ள நிலையில், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில் இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக் கண்ணீர்ப் புகைத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4