உங்களுக்கு உல்லாச வாழ்வு; எங்களுக்குப் பட்டினிச் சாவா? யாழில் அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம்

#Jaffna #Protest #Gotabaya Rajapaksa
Prasu
4 years ago
உங்களுக்கு உல்லாச வாழ்வு; எங்களுக்குப் பட்டினிச் சாவா? யாழில் அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம்

அரசுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

"உங்களுக்கு உல்லாச வாழ்வு; எங்களுக்குப் பட்டினிச் சாவா? மக்களே வாரீர் கோட்டா - மஹிந்த - பஸில் ஆட்சியிடம் நியாயம் கேட்போம்" என்ற கோஷத்துடன் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வட பிராந்திய செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்துக்கான அழைப்பிதழில், "அரிசி, சீனி, மா, பாண், பருப்பு, மல்லி, மிளகாய் என்ன விலை? மண்ணெண்ணெய், டீசல், பெற்றோல், காஸ் இல்லை ஏன்? எங்கள் வரிப்பணம் எங்கே? வரிசைகளில் காத்திருந்து நாம் வாழ்வைத் தொலைப்பது இன்னும் எத்தனை காலத்துக்கு? தட்டிக் கேட்க அணிதிரள்வோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4