இரவு நேரம் ஜனாதிபதியின் வீட்டைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் - பாதுகாப்பு கருதி குவிக்கப்பட்ட பொலிஸார்

Prathees
4 years ago
இரவு நேரம் ஜனாதிபதியின் வீட்டைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் - பாதுகாப்பு கருதி குவிக்கப்பட்ட பொலிஸார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜூபிலி போஸ்ட் சந்தியிலிருந்து மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்திற்கு பேரணியாக சென்றுள்ளனர்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (31) இரவு 7.30 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து அங்கு ஏராளமானோர் தங்கியுள்ள நிலையில், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

போராட்டம் காரணமாக மஹரகம - மிரிஹான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரம் என்பதையும் பொருட்படுத்தாது மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு ஜனாதிபதியின் இல்லத்தருகே வீதியை மறித்துள்ளமையால் அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ் இரவு நேரத்தில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதால் வாகன நெரிசல்களும் ஏற்பட்டுள்ளதாக நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஊர்வலத்துடன் வாகன ஓட்டிகள் சங்குகளை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது மிரிஹான - அம்புல்தெனிய வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள்,எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொலிசார் தலையிட்டு நிலைமையை ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4