கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பல்கலைக்கழக மாணவன்

Nila
4 years ago
கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பல்கலைக்கழக மாணவன்

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் அண்மையில் மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நான்காம் வருட மாணவராக இருந்த இவர், நான்காம் வருட இறுதிப் பரீட்சைக்கு இடையில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவனின் அறையில் இருந்து, "மன்னிக்கவும், இனி இந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியாது. எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை" என எழுதப்பட்ட கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4