சர்வதேச நாணயங்களுக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கை ரூபா

Nila
4 years ago
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கை ரூபா

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கமைய ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் விற்பனை விலை 394 ரூபாவும் கொள்வனவு விலை 379 ரூபாவாகும் பதிவாகி உள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299 ரூபாவாகவும் கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 337 ரூபாவாகவும் கொள்வனவு விலை 325 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 325 ரூபாவாகவும் கொள்வனவு விலை 313 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 240 ரூபாவாகவும் கொள்வனவு விலை 230 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

தனியார் வங்கிகளில் குவைத் தினார் ஒன்று 1001.70.  ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை ஏனைய மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது.

பஹ்ரைன் தினார் ஒன்றின் பெறுமதி 797.33 ரூபாவாகவும்,

ஓமான் ரியால் ஒன்றின் பெறுமதி 785.59 ரூபாவாகவும்,

கட்டார் ரியால் ஒன்றின் பெறுமதி 83.98 ரூபாவாகவும்,

சவூதி அரேபிய ரியால் ஒன்றின் பெறுமதி 84.24 ரூபாவாகவும்,

ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் ஒன்றின் பெறுமதி 84.87 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் டொலருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4