உங்க ராசிக்கு செல்வந்தராகும் யோகம் இருக்கிறதா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்

Nila
4 years ago
உங்க ராசிக்கு செல்வந்தராகும் யோகம் இருக்கிறதா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்

மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் பணம் என்பது இன்றியமையாத தேவையாகி விட்டது.எனவே, அனைவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இருப்பினும், ஒருவர் செல்வந்தராக கடின உழைப்பு என்பது மிகவும் அவசியம். ஆனால், ஜோதிட ரீதியாக சில ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே செல்வந்தராகும் யோகம் உண்டு. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் உள்ளது என்று தெரிந்து கொள்வோம்.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களில் ஏப்ரல் 20 – மே 20 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். இவர்கள் மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களைக்கூட வெற்றியோ, தோல்வியோ முயற்சி செய்து பார்க்கலாம் என்று மன உறுதியுடன் செய்யக்கூடியவர்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் நம்பகத்தன்மை மிக்கவர்களாகவும், சிறந்த பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள். சிறந்த நிதி நிர்வாக திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு விருப்பமான மற்றும் பாசத்திற்குரிய நபர்களுக்கு பரிசளிக்கும் போது கவனத்துடன் செயல்படுவது மிகவும் அவசியமாகும்.

 
கடகம் :கடக ராசிக்காரர்களில் ஜூன் 21 – ஜூலை 22 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். இவர்கள் தங்களின் குடும்பத்தின் மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள். மற்றவர்களை மிகவும் அதிகமாக விரும்பக் கூடியவர்களாகவும், அவர்கள் மீது அதிக அக்கறை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், இவர்கள் தங்களது நிதி நிலை, நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பது குறித்து மற்றவர்களிடத்தில் ஆலோசனை கேட்காமல் இருப்பது நல்லது.

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களில் ஜூலை 23 – ஆகஸ்ட் 22 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். இவர்கள் மிகச் சிறந்த செல்வ வளம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களது பிறப்பு ஏழ்மையில் ஆரம்பித்தாலும் கூட இவர்கள் தங்களது சொந்த முயற்சியினால் செல்வந்தராவார்கள்.

கன்னி : கன்னி ராசிக்காரர்களில் ஆகஸ்ட் 23 – செப்டம்பர் 22 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். இவர்கள் தங்களது தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை சுமூகமாக பேசி முடிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்து விதமான நிதி சம்பந்தப்பட்ட வேலைகளையும் சிறப்பாக செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் ரியல் எஸ்டேட் தொழில்களில் மிக சிறந்தவர்களாக திகழ்வார்கள்.
 
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களில் அக்டோபர் 23 – நவம்பர் 21 வரையிலான காலக்கட்டத்தில் பிறந்தவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். இவர்கள் பண விஷயத்தில் எப்போதும் கரராக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் தங்களுக்கு விருப்பமான பாதையில் எப்போதும் செல்லக்கூடியவர்கள். அதனால் இவர்களுக்கு எந்த வழியிலாவது செல்வம் வந்து கொண்டே இருக்கும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4