கொலை வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை!

Nila
4 years ago
கொலை வழக்கிலிருந்து  பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர்  இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2015ம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகரவிற்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இரத்தினபுரி – காஹவத்தை பகுதியில் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் இந்த கொலை சம்பவம் நேர்ந்தது.

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் 2020ம் ஆண்டு ஜுலை மாதம் 31ம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4