வராதே - நாமலுக்கு எதிராக வீதியை மறித்து போராட்டம் நடத்திய மக்கள்

Prathees
4 years ago
வராதே - நாமலுக்கு எதிராக வீதியை மறித்து போராட்டம் நடத்திய மக்கள்

பண்டாரவளை மாநகர சபைக்கு சொந்தமான நளின் பங்கரியந்த சூரிய விளையாட்டரங்கம் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நேற்று (30) திறந்து வைக்கப்படவிருந்த வேளையில் பண்டாரவளை புறநகர் பகுதி மக்கள் டீசல் வழங்குமாறு கோரி இரண்டு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

பல நாட்களாக பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நின்றாலும் டீசல் கிடைக்காததால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

 ஆர்ப்பாட்டக்காரர்கள்  பண்டாரவளை நகர பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையிலும், பண்டாரவளை பதுளை வீதி புனித ஜோசப் கல்லூரிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையிலும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பேருந்து ஊழியர்கள், தனியார் பேருந்து நடத்துநர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் உட்பட ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்ற போதிலும், தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படுவதில்லை எனவும், இந்த நிலையில் தமது தொழில்களை மேற்கொள்ள முடியாது எனவும் மக்கள் பண்டாரவளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4