நான் கிராமத்திற்கு செல்லலாமா? அமைச்சர் சமலின் பதில்கள்

Prabha Praneetha
4 years ago
நான் கிராமத்திற்கு செல்லலாமா? அமைச்சர் சமலின் பதில்கள்

நீர்த்தேக்கங்கள், குடிநீர், விவசாயம் மற்றும் நீர் மின் உற்பத்தி ஆகிய சகல தேவைகளையும் கவனத்திற்கொண்டு நீர் விடுவிக்கப்படும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மறைந்த பிலிப் குணவர்தனவின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து கவலையடைவதாக மேலும் தெரிவித்தார்.

  இந்த நிகழ்வில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்து கொண்டார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4