டீசலுக்காக வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு CEYPETCO கோரிக்கை

Prathees
4 years ago
டீசலுக்காக வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு CEYPETCO கோரிக்கை

37,500 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கிவந்த கப்பலிலிருந்து திட்டமிட்டவாறு எரிபொருளை தரையிறக்க முடியாது போயுள்ளது. 

எனவே.  இன்றும் நாளையும்    எரிபொருள் நிலையங்களில் டீசலுக்காக வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) கோரியுள்ளது. 

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படும் அதேவேளை, எவ்வித பற்றாக்குறையும் ஏற்படாதவாறு வழமைபோல பெற்றோல் விநியோகம் இடம்பெறும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4