இன்று தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு

Prathees
4 years ago
இன்று  தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு

இன்று  சில வலயங்களில் தொடர்ச்சியாக 10 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளைய மின்துண்டிப்பு மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் நாளை காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை 6 மணித்தியாலங்களும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை 2 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் நாளை காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை 6 மணித்தியாலங்களும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை 2 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

அவ்வாறே, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4