குடிபோதையில் வாகனம் செலுத்தியதை சுகாதார சேவைகள் பணிப்பாளர்: நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Prathees
2 years ago
குடிபோதையில் வாகனம் செலுத்தியதை  சுகாதார சேவைகள் பணிப்பாளர்: நீதிமன்றத்தில்  குற்றத்தை ஒப்புக்கொண்டார்

குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நுவரெலியா நீதவான் அவரை கடுமையாக எச்சரித்து அரச கட்டணமான ரூபா 1500 செலுத்துமாறு உத்தரவிட்டதுடன் சாரதி அனுமதிப்பத்திரமும் விடுவிக்கப்பட்டது.

 நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றும் சுமித் நிமல் மனதுங்க என்பவருக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 27ஆம் திகதி ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் மதுபோதையில் சென்றதாகவும், அங்கு ஹோட்டல் ஊழியர்கள் மதுபோதையில் இருக்கின்றார்களா என பரிசோதிக்க வந்ததாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சோதனைக்கு வரும்போது குடித்துவிட்டு வரக்கூடாது என்றும் கூறியதையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குநர் கோபத்துடன் கிளம்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.