தாடி இருந்தால் மட்டுமே அரசு அலுவலகங்களுக்குள் அனுமதி – தலீபான்கள் புதிய அறிவிப்பு
Mayoorikka
3 years ago
ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்தே தலிபான்கள் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆண் ஒருவரின் துணையின்றி பெண்கள் விமானப் பயணம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய கட்டுப்பாட்டை தலிபான்கள் விதித்துள்ளனர். அதில், அரசு ஊழியர்கள் தாடி வைத்திருந்தால் மட்டுமே அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இதையடுத்து அமைச்சரவை அலுவலகத்திற்குள் தாடி வைக்காமல் சென்ற அரசு ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனிடையே இந்த உத்தரவுக்கு தலிபான் ஆதரவாளர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தாடி வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் ஒருபோதும் மக்களை வற்புறுத்தியதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்