இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுமா ? வெளியான அறிவிப்பு!

#SriLanka #Parliament
Nila
4 years ago
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுமா ?  வெளியான அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையாக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தாலும் இரண்டரை ஆண்டுகள் செல்லும் வரை ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் இது கூறப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட காலம் செல்லும் வரை எவராலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.

எனினும் நாடாளுமன்றத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றால் அது வேறான நிலைமை. ஆனால், இரண்டரை ஆண்டுகள் செல்லும் வரை ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரமில்லை எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4