ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்!

Soruban
4 years ago
 ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்!

உணவுப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி, சீனி, பருப்பு, மிளகாய் ஆகிய பொருட்கள் அடங்கிய மேலும் ஆயிரம் கொள்கலன்களே இவ்வாறு தேங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிக உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு டொலர் பற்றாக்குறை தடையாகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், போதியளவு உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிஹால் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4