இந்த ஆண்டு 2,74,211 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

Prathees
4 years ago
இந்த ஆண்டு 2,74,211 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் முடிவதற்குள் 2,74,211 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் 12 மாதங்களில் 1,94,495 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் 82,327 சுற்றுலாப் பயணிகளும், பிப்ரவரியில் 96,507 பேரும், மார்ச் 27 அன்று 95,377 பேரும் வந்துள்ளனர்.

20,965 இந்தியர்கள், 10,553 ஆஸ்திரேலியர்கள், 8,590 ஜெர்மனியர்கள், 8537 ரஷ்யர்கள், 5040 பிரெஞ்சு, 3068 போலந்து, 2796 அமெரிக்கர்கள், 2615 கனடியர்கள், 2528 கஜகஸ்தான், 2068 ஈரானியர்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்த 2864 பேர் இம்மாதம் 27ஆம் jpfதி நாட்டை வந்தடைந்துள்ளனர்

இவ்வருடம் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சுற்றுலா அமைச்சு திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர்பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4