கூட்டமைப்பின் சதிகார வலைக்குள் ஜனாதிபதி கோட்டா சிக்கக்கூடாது! வலியுறுத்துகின்றார் விமலின் சகா

Reha
4 years ago
கூட்டமைப்பின் சதிகார வலைக்குள் ஜனாதிபதி கோட்டா சிக்கக்கூடாது! வலியுறுத்துகின்றார் விமலின் சகா

"விடுதலைப் புலிகளால் முடியாமல்போன ஈழக் கனவை அடைவதற்குத் தமிழ் டயஸ்போராக்கள் முயற்சிக்கின்றனர். அதற்கான நகர்வுகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது. கூட்டமைப்பு விரித்துள்ள சதிகார வலைக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிக்கக்கூடாது." - இவ்வாறு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

"நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைப் பயன்படுத்தி தமது இலக்குகளை அடைவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இதன்காரணமாகவே ஜனாதிபதியுடன் கூட்டமைப்பினர் பேச்சு நடத்தியுள்ளனர்.

எதற்காக விசேட நிதியம் உருவாக்கப்பட வேண்டும்? ஈழம் என்ற இலக்கை அடைய வியூகம் வகுக்கப்படுகின்றது. இதற்காகவா எமது படையினர் உயிர்களைத் தியாகம் செய்தனர்? எனவே, கூட்டமைப்பு விரித்துள்ள சதிகார வலைக்குள் ஜனாதிபதி சிக்கக்கூடாது" - என்றார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4