குழந்தைகள் தொடர்பில் விசேட வைத்திய நிபுணரால் விடுக்கப்பட்ட கோரிக்கை!

Mayoorikka
4 years ago
குழந்தைகள் தொடர்பில் விசேட வைத்திய நிபுணரால் விடுக்கப்பட்ட கோரிக்கை!

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளதால், அதிகளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குளிப்பதைக் கட்டுப்படுத்துவதால் வியர்வை கொப்புளங்கள் அதிகரிக்கலாம் எனவும் அதனால் இருமல், சளி எதுவாக இருந்தாலும் குழந்தைகளைக் குளிப்பாட்டுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4