விரைவில் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் இடங்கள்

Prabha Praneetha
4 years ago
விரைவில் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் இடங்கள்

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக இருக்கும் பொது இடங்கள் குறித்து அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் ´சில செய்தி தளங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், எதிர்காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த இடங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், கொவிட் தடுப்புக்கான தொழில்நுட்பக் குழு கொவிட் தடுப்பூசி அட்டையை எங்கு கட்டாயமாக்குவது என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4