மருத்துவமனைகளில் எரிவாயு நெருக்கடி இல்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

#SriLanka #Litro Gas #doctor
Reha
4 years ago
மருத்துவமனைகளில் எரிவாயு நெருக்கடி இல்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பொய்யானவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை அமைப்பிற்கு முன்னுரிமை கொடுத்து எரிவாயு விநியோகம் தொடரும் என வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

“இலங்கை முழுவதிலும் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் மற்றும் பிராந்திய சேவைகளின் பிராந்திய பணிப்பாளர்களுடன் நாங்கள் பேசினோம், எரிவாயு தட்டுப்பாடு இருந்திருக்கலாம், ஆனால் நாங்கள் அதைப் பற்றி விவாதித்தபோது, ​​அவர்கள் அனைவரும் இல்லை என்று கூறினார்கள். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4