இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பு!

#SriLanka #Power #Lanka4
Reha
4 years ago
இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பு!

இன்றைய தினமும் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும், மின்துண்டிப்பினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4