தென்கொரியாவில் ஒரேநாளில் 3.35 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

#Covid 19 #Covid Variant
Prasu
4 years ago
தென்கொரியாவில் ஒரேநாளில்  3.35 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

ஆசிய நாடுகளை கொரோனா திணறிடித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவின் முதல் அலையின்போதே அதை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்த சீனா, தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன. தென்கொரியாவில் நேற்று ஒரு நாளில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 479 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 1 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரத்து 711 ஆக உயர்ந்தது.

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் நேற்று 1 லட்சத்து 3 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் அந்த நாட்டின் மொத்த பாதிப்பு 89 லட்சத்தை கடந்துள்ளது.

நியூசிலாந்தில் 14 ஆயிரத்து 175 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், சீனாவில் 1,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4