பாதுகாப்பு அமைச்சரை பணிநீக்கம் செய்த ஜெலென்ஸ்கி - உக்ரைனில் மக்கள் எதிர்ப்பு

#Protest #people #Minister #Ukraine #LANKA4 #Zelensky #Defense #L4
Prasu
2 months ago
பாதுகாப்பு அமைச்சரை பணிநீக்கம் செய்த ஜெலென்ஸ்கி - உக்ரைனில் மக்கள் எதிர்ப்பு

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ பெடோரோவைப் பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நடவடிக்கையால் பொதுமக்களிடையே கடும் கோபத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கீவ் மற்றும் பிற உக்ரைனிய நகரங்களில் ஒன்றுகூடிய இளைஞர்கள், "மைக்கலோ ஃபெடோரோவை தொடாதே, வெற்றியை நாசமாக்குவதை நிறுத்து" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி, "வெட்கம்!" என்று கோஷமிட்டனர்.

35 வயதான மைக்கலோ பெடோரோவ், கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, உக்ரைனின் டிஜிட்டல் உருமாற்ற அமைச்சராகப் (Digital Transformation Minister) பணியாற்றிய இவர், ரஷ்யாவுக்கு எதிரான போரில் ட்ரோன் (Drone) தொழில்நுட்பங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி உக்ரைன் ராணுவத்திற்குப் பெரும் பலம் சேர்த்தவர் என்று பாராட்டப்பட்டவர்.

பெடோரோவுக்கும் உக்ரைன் ராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கிக்கும் (Oleksandr Syrskyi) இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த பணிநீக்கம் இடம்பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!