அரசிலிருந்து வெளியேற மேலும் 10 பேர் தீர்மானம்?

Prabha Praneetha
4 years ago
அரசிலிருந்து வெளியேற மேலும் 10 பேர் தீர்மானம்?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கான ஆதரவு நாளாந்தம் சரிந்துவரும் நிலையில், மேலும் 10 ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

எனினும், உடனடியாக எதிரணியில் இணையாமல், இவர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாகச்  செயற்படக்கூடும் என அறியமுடிகின்றது.

அநுரபிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, நிமல் லான்சா, பிரேம்நாத் தொலவத்த, சந்திம வீரக்கொடி உட்பட 10 ஆளுங்கட்சி உறுப்பினர்களே இந்த முடிவை எடுக்கவுள்ளனர்.

சந்திம வீரக்கொடி அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றார். அதிருப்தி காரணமான நிமல் லான்சா அண்மையில் இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார்.

சுசில் பிரேமஜயந்த அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4