ரணில் விடுத்த கோரிக்கைக்கு அரசு பச்சைக்கொடி!
Prabha Praneetha
3 years ago

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று காலை ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையில், சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடியாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
முன்னாள் பிரதமரின் இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார.



