உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிணைந்து நிதி திரட்டும் கனடாவும் ஐரோப்பாவும் - ட்ரூடோ அறிவிப்பு

உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு சர்வதேச அளவில் நிதி திரட்டும் முடிவுக்கு கனடாவும் ஐரோப்பாவும் ஒன்றிணைந்து செயல்படும் என தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது கடந்த 30 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவோம் என கூறி களமிறங்கிய ரஷ்யா, தற்போது முதற்கட்ட சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது என அறிவித்துள்ளது.
ஆனால், எதிர்வரும் மே 9ம் திகதி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் திட்டமும் ரஷ்யாவிடம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறி பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றியம் நிதி திரட்ட திட்டமிட்டு, அறிவிப்பும் செய்துள்ளது.
சர்வதேச சமூகத்திடம் இருந்து நிதி திரட்டும் இந்த திட்டத்தில் தற்போது கனடாவும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.



