சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை: சபையில் உடனடி விவாதம் வேண்டும் - ரணில் வலியுறுத்து
#Ranil wickremesinghe
#government
#Lanka4
Reha
3 years ago

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை குறித்தான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை நேற்றுமுன்தினம் வெளிவந்தது. நாளை அமைச்சரவையில் அது பற்றி ஆராயப்படவுள்ளது.
இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.



