பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நேர மாற்றம் பற்றிய அறிவித்தல்.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27/03/22) அதிகாலை ஒரு மணி இரண்டு மணியாக மாற்றப்படும்.நேர மாற்ற நடைமுறை அறிமுகமாகி 106 ஆண்டுகள்.பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் கடிகாரத்தில் நேரம் மாற்றப்படும்.
வசந்தகாலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும்,இலையுதிர் காலத்தில் ஒரு மணி
நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேரம் மாற்றப்படும்.வசந்தகாலம் துவங்கும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிரான இன்று (27/03/22) அதிகாலை ஒரு மணி இரண்டு மணியாக மாற்றப்படும்.இலையுதிர் காலமான அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை,மீண்டும் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்படும்.
1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நேர மாற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிக்கமைய 2021ஆம் ஆண்டிற்கு பின்னர் முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியம் 2019 முதல் நடைமுறைக்கு வரவிருந்த நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை முன்வைத்தது.எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சில உறுப்பு நாடுகள் இந்த யோசனைக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டும் இந்த திட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



