சீனாவிடமிருந்து, இலங்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக் தொன் அரிசி
Prabha Praneetha
3 years ago
25 இலட்சம் டொலர் பெறுமதியான அரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.
இதற்கமைவாக, இரண்டாயிரம் மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டும் இந்த உதவி வழங்கப்படுவதாக இலங்கைக்கான சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.