13ஐ முழுமையாக அமுல்படுத்த ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள்? - கோட்டா முன் மேசையில் ஓங்கி அறைந்த சம்பந்தன்

#SriLanka #Gotabaya Rajapaksa #R.Sambanthan
Prasu
4 years ago
13ஐ முழுமையாக அமுல்படுத்த ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள்? - கோட்டா முன் மேசையில் ஓங்கி அறைந்த சம்பந்தன்

"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் உங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை என்ன?"

- இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச முன்னிலையில் மேசையில் அடித்துக் கேட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கேள்வி தொடுத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வின் மூலம் நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும்.

நாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும். ஒரு நாடு, ஒரே மக்கள் என்று செயற்பட்டு, நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து, நாட்டை விடுவிப்பது அனைத்துத் தரப்பினரினதும் பொறுப்பாகும்.

இலங்கை, கிழக்கு சுவிட்சர்லாந்தாக மாறுவதைக் காண விரும்புகின்றோம்" - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4