உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

#Ukraine #War #Russia
Prasu
3 years ago
உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ரஷியா- உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வந்து சமாதானம் நிலவுவதற்காக போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பி‌ஷப்கள், பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் என 3,500 பேர் கலந்து கொண்டனர்.

பிரார்த்தனையின்போது பேசிய போப் பிரான்சிஸ், கடந்த நூற்றாண்டில் நடந்த 2 உலகப் போர்கள் தந்த கசப்பான அனுபவங்களை மனித குலம் மறந்துவிட்டதாக கூறினார்.

இந்த சிறப்பு பிரார்த்தனை 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. அதேபோல் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் உள்ளூர் மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

வாடிகனில் நடந்த பிரார்த்தனையில் ரஷியா மற்றும் உக்ரைன் தூதர்கள் பங்கேற்றனர். ஆனால் அவர்கள் அரங்கத்தில் எதிரெதிரே அமர்ந்து இருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!