மிக விரைவில் பூட்டப்படும் இலங்கை விமான நிலையங்கள்? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Mayoorikka
4 years ago
மிக விரைவில் பூட்டப்படும் இலங்கை விமான நிலையங்கள்? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூட்டப்பட்டு நாட்டு மக்கள் வெளிநாடுகளுடன் தொடர்பில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

இப்போது வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அடிப்படை வாழ்வாதார விடயங்கள் மட்டுப்படுத்தப்பட்டு விட்டன.

ஆகவே வெளிநாட்டு பயணங்கள் கூட மட்டுப்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்போது எல்லா நிறுவனங்களும் டொலரில் தான் தமது கொடுப்பனவுகளை கோருகிறார்கள்.

மிக விரைவில் விமான நிலையங்கள் பூட்டப்பட்டு, துறைமுகங்கள் பூட்டப்பட்டு, நாட்டு மக்கள் வெளிநாடுகளுடன் தொடர்பில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4