எரிபொருள் இல்லை.. அமைச்சர்களுக்காக நிறுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள்.. ஜனாதிபதி-பிரதமர் மட்டும்..

#SriLanka #Fuel #Minister
எரிபொருள் இல்லை.. அமைச்சர்களுக்காக நிறுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள்.. ஜனாதிபதி-பிரதமர் மட்டும்..

பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளின் விஜயங்களுக்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்களை வழங்குவதற்கு இலங்கை விமானப்படை அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது விமானப் பயணத்துக்காக இதுவரை 10 மில்லியன் ரூபாவிற்கு மேல் விமானப் படைக்கு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு ஹெலிகாப்டர் ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஐநூறு லிட்டர் எரிபொருளை பயன்படுத்துகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4