இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவில் இருந்து இலங்கைக்கு 2000 தொன் அரிசி

#SriLanka #China #rice
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவில் இருந்து இலங்கைக்கு 2000 தொன் அரிசி

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அவசர உணவு உதவியாக 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் தேவைப்படும் சமயங்களில் ஒருவரையொருவர் ஆதரித்துள்ளதுடன், சீன அரசாங்கம் இலங்கைக்கு தனது ஆதரவை வழங்க எப்போதும் தயாராகவே உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4