நீரில் மூழ்கிய பெண்ணைக் காப்பாற்ற முயன்ற இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!

Nila
4 years ago
நீரில் மூழ்கிய பெண்ணைக் காப்பாற்ற முயன்ற இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!

அவிசாவளை - தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு அருகில் நீராடச் சென்றிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று (25) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாத்திரை குழுவொன்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்குழுவைச் சேர்ந்த பெண்ணொருவர்  நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முற்பட்ட போதே இவ்விருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் ராஜகிரிய மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், நீரில் மூழ்கிய பெண் பிரதேசவாசிகளால் உயிருடன் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4