இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் முக்கியஸ்தர்!

Mayoorikka
4 years ago
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் முக்கியஸ்தர்!

இந்திய  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்  இம்மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 – 30 ஆம் திகதிகளில் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் அமையவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இந்த விஜயத்தின்போது, கொழும்பில் நடைபெறும் BIMSTEC மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4