சீன பயணத் தடையால் 5,000 இலங்கை மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்

Mayoorikka
4 years ago
சீன பயணத் தடையால் 5,000 இலங்கை மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்

சீனாவில் இருந்து 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாடு திரும்பிய சுமார் 5,000 இலங்கை மருத்துவ மாணவர்கள், தற்போது மீண்டும் பீஜிங்கிற்கு தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சீனாவில் கோவிட்-19 பரவியதில் இருந்து ஆறு வருட மருத்துவப் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்கள் நாடு திரும்பியிருந்தனர். ஆனால் வெளிநாட்டினர் வருவதை தடை செய்ததால் அவர்களால் சீனாவுக்கு திரும்ப முடியவில்லை.

இந்த மாணவர்களில் பெரும்பாலோர் மருத்துவப் பயிற்சி பெற வேண்டும், ஆனால் சீனப் பல்கலைக்கழகங்கள் இந்த மாணவர்களை ஆன்லைன் பயிற்சியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4