பேரல் சங்க'வின் நெருங்கிய கூட்டாளிகள் வீதியில் சுட்டுக் கொலை

Prathees
4 years ago
பேரல் சங்க'வின் நெருங்கிய கூட்டாளிகள் வீதியில் சுட்டுக் கொலை

கடவத்தை மஹர 9 அஞ்சல் பகுதியில் வீதியில் வைத்து இருவர் சுட்டுக் கொல்லப்பட்டு அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றதால் அப்பகுதி முழுவதும் அச்சம் ஏற்பட்டது.

கடந்த 24ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இரட்டைக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பலியானவர்கள் கசுன் சிந்தக மற்றும் கலும் சமீர என அடையாளம் காணப்பட்டவர்கள், பேலியகொட பிரதேசத்தில் பாதாள உலக கும்பல் என கூறப்படும் 'பேரல் சங்க'வின் நெருங்கிய கூட்டாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு  மட்டுமின்றி வேறு சில குற்றச்சாட்டுக்களும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் பேரல் சங்காவின் கையாட்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பேலியகொட பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, கடவத்த மஹர  பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வீதியை மறித்துள்ளது.

அப்போது பேரல் சங்காவின் சீடர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பாதாள உலக உறுப்பினர்களும் T-56 ரக துப்பாக்கியால் கீழே விழுந்த நபர்களை சுட்டுள்ளனர்.10 தோட்டாக்கள் பாய்ந்ததில் இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாக்குதல் இடம்பெற்ற விதம் சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ள நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4