ஒரே நாளில் 200 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - உக்ரைன் ராணுவம்

#Ukraine #War #Russia
Prasu
3 years ago
ஒரே நாளில் 200 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - உக்ரைன் ராணுவம்

உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது

கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் படைகள் சுமார் 200 ரஷிய ராணுவ வீரர்களைக் கொன்றதுடன், ஒன்பது தாக்குதல்களையும் முறியடித்துள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12 டாங்கிகள், 20 கவச வாகனங்கள், 9 பீரங்கி அமைப்புகள், 3 விமானங்கள் மற்றும் 3 ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

அதே நேரத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 135  குழந்தைகளை ரஷிய ராணுவம் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 184 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான கொலைகள்  கீவ் (64), கிழக்கு கார்கிவ் (44) மற்றும் தென்கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் (46) நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியா வேண்டுமென்றே பொதுமக்கள்,  பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!