தங்கத்தில் செய்யப்பட்ட கழிப்பறை - அனைவரையும் ஆச்சரியப்படவைத்த புட்டினின் சொத்து மதிப்பு

Nila
3 years ago
தங்கத்தில் செய்யப்பட்ட கழிப்பறை - அனைவரையும் ஆச்சரியப்படவைத்த புட்டினின் சொத்து மதிப்பு

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் வலுப்பெற்றுவரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் சொத்து விவரங்கள் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா ராணுவத் தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது. மிகக் குறைந்த அளவிலேயே படை பலமும், ஆயுத பலமும் கொண்ட உக்ரைனை, ரஷ்யா விடாமல் தாக்கிவருகிறது.

உக்ரைனும் ஈடுகொடுத்து தாக்கிவருகிறது. இந்தப் போரின் காரணமாக உலக அளவில் தற்சமயம் அனைவரும் ரஷ்ய அதிபர் புதினின் செயல்பாடுகளை உற்று கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில், `ஹெர்மிட்டேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனம் புட்டினின் சொத்து மதிப்பு தொடர்பாக 2017 கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் தகவல் தெரிவித்திருக்கிறது.

அதில், புதினுக்கு 200 பில்லியின் அமெரிக்க டொலர் அளவுக்குச் சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.15 லட்சம் கோடி. மேலும் 700 கார்கள், பல ஜெட் விமானங்கள், 58 விமானங்கள், ரூ.5.35 கோடி மதிப்புள்ள கைக் கடிகாரங்கள், இத்தாலியில் 6 மாடிகொண்ட அதிநவீன சொகுசுப் படகு ஆகியவை புட்டினுக்கு சொந்தமாக இருப்பதாக அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

அதேபோல, கருங்கடலுக்கு மிக அருகே 1,90,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன சொகுசு பங்களாவும், நவீன சொகுசு விமானமும் அவற்றில் கழிப்பறைகளில் தங்கமுலாம் பூசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!