இலங்கையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

Nila
4 years ago
இலங்கையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகரித்து வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் மீது போர் ஆரம்பமானதிலிருந்து சர்வதேச பங்குச் சந்தை மீதான முதலீடு குறைவடைந்து தங்கம் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு உயர்வடைந்தது. எனினும் அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை  ஒரு இலட்சத்து 53 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாயாக காணப்பட்டது.

இந்நிலையில், 24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 67 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு வாரமாக 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு இலட்சத்து 61 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4