வவுனியாவில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் படும் கஸ்டம் (PHOTOS)

Nila
4 years ago
வவுனியாவில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் படும் கஸ்டம் (PHOTOS)

நாட்டின் பல மாவட்டங்களிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் இவற்றிக்காக இன்றும் (25) மக்கள் பல மணிநேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தின் பல எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ள போதிலும், மாவட்டத்தின் இரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு 1000 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து குறித்த எரிபொருள் விற்பனை நிலையங்களின் முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மேலும், எரிவாயு லிட்ரோ சிலிண்டரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே வழங்கப்படுவதுடன், வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு விநியோக முகவரினால் இன்று (25) 40 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதிகாலை 4.30 மணி தொடக்கம் மக்கள் காத்திருந்து காலை 10.30 மணியளவில் எரிவாயுவினை பெற்றிருந்தனர்.

இதனால் அரச உத்தியோகத்தர்கள், மற்றும் நாளாந்த வேலைக்கு செல்வோர் என பலரும் நீண்ட நேரம் காத்து நின்று அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் உரிய நேரங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு நீண்ட நேரம் காத்திருந்தும் சிலருக்கு எண்ணெய் கிடைக்காமல் போகும் நிலையும் ஏற்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4