ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று!

Mayoorikka
4 years ago
ஜனாதிபதிக்கும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று!

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) முற்பகல் 10.30க்கு இடம்பெறவுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட சந்திப்பு, கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அந்த சந்திப்பு பிற்போடப்பட்டது.

இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ என அறியப்படும் தமிழீழ விடுதலை கழகம் பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4