மனைவியின் ஆசையை நிறைவேற்றிய இளைஞன் கொலை

Mayoorikka
4 years ago
மனைவியின் ஆசையை நிறைவேற்றிய இளைஞன் கொலை

கர்ப்பிணியான மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மாமாவின் காணியில் இருந்த பலா மரத்தில் பாலாக்காய் ஒன்றை பறித்த இளைஞன் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாமாவின் கத்திக்குத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வடக்கு எல்பிட்டிய, எகொடகெதர பகுதியைச் சேர்ந்த 34 வயதான கே.எம்.ஷெஹான் லசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும், உயிரிழந்த இளைஞனின் மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4