இரவு சாப்பாட்டிற்கு மிக்ஸ்டு வெஜ் இட்லி அவிக்கும் முறை !

#Cooking #dinner #meal
இரவு சாப்பாட்டிற்கு மிக்ஸ்டு வெஜ் இட்லி அவிக்கும் முறை !

தேவையான பொருட்கள்

  • இட்லி மாவு - 2 கப்
  • பொடியாக நறுக்கிய கேரட் - 50 கிராம்
  • பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 50 கிராம்
  • பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 50 கிராம்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் -50 கிராம்
  • மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு
  • எண்ணெய் -2 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
  • உளுந்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பைச் சேர்த்து வதக்கவும். 
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட், முட்டைகோஸ், பீன்ஸை சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய மல்லித் தழையைச் சேர்த்து வதக்கவும். 
  3. தேவையான உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து பிரட்டவும். வதக்கிய கலவையை இட்லி மாவுடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். 
  4. இட்லி தட்டில் கரைத்த வெஜிடபிள் இட்லி மாவைச் சேர்த்து மிருதுவாக வேக வைத்து இறக்கவும். சுவையான தக்காளி (அ) மல்லிச் சட்னியுடன் பேக் செய்து தரவும்.

குறிப்பு

  • இட்லி தட்டில் அரைக்கரண்டி மாவைச் சேர்த்து அதன் மேல் வதக்கிய காய்களைச் சேர்க்கவும்.