இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில்  பொருட்களின் விலை  அதிகரிப்பு தொடர்பில்  மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், மறுபுறம் கறுப்பு சந்தை வியாபாரமும் உருவாகி வருவதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்த வேண்டும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பதற்கு முன்னரே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை 150 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயுவை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்யும் கறுப்பு சந்தைகளும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு பின்னால் தீவிரமாக செயற்பட்டு வரும் கறுப்பு சந்தை குறித்து புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4