சென்னை ஐஐடியில் அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழப்பு!

Prabha Praneetha
4 years ago
சென்னை ஐஐடியில் அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழப்பு!

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட பல வன உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஐடி வளாகத்திற்குள் மான் ஒன்று இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மானின் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டதில் மானுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து நேற்றைக்குள் மேலும் 3 மான்கள் இறந்துள்ளன. இந்த மான்களின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மான்கள் மற்றும் விலங்குகளிடையே ஆந்த்ராக்ஸ் நோய் பரவியுள்ளதா என்ற பீதி எழுந்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4