ரஷ்யாவுக்கு உதவி செய்யக்கூடாது- சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

#America
Mayoorikka
4 years ago
ரஷ்யாவுக்கு உதவி செய்யக்கூடாது- சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு உதவி செய்யக்கூடாது- சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள், ரஷியாவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தினார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசியில் பேசினர்.

அப்போது இருவரும் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக விவாதித்தனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பில் சீனா, ரஷியாவுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்யக்கூடாது. ரஷியாவுக்கு சீனா உதவி செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.

சீன அதிபர் ஜின்பிங் கூறும்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள், ரஷியாவுடன் பேச்சு நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறும்போது, “போரை நடத்துவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. உலக அமைதிக்கான முயற்சியின் ஒரு பகுதியாக உலகின் முதல் 2 பொருளாதார நாடுகளுக்கு இடையேயான உறவுகள் சரியான பாதையில் முன்னேற வேண்டும்” என்றார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4