இந்தியா வழங்கிய கடனுக்கு எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை

Mayoorikka
4 years ago
இந்தியா வழங்கிய கடனுக்கு எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை

இந்தியா – இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமைக்காக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்று (18) நாடு திருப்பிய அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ விமான நிலையத்தில். ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த இந்த நிதியை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்துவது அவசியமாகும். ஜனாதிபதி நீண்டகால திட்டமிடலின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கையுடன் அயல்நாடான இந்தியா தொடர்ந்தும் நெருக்கமாகச் செயற்படுகின்றது. இலங்கைக்குத் தேவையான பொருளாதார சமூக ஒத்துழைப்புக்களை நேரடியாக வழங்குவதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4