இரயில் கட்டண அதிகரிப்பு குறித்து திங்கள்கிழமை முடிவு எடுக்கப்படவிருக்கிறது.

#SriLanka #Railway #prices
இரயில் கட்டண அதிகரிப்பு குறித்து திங்கள்கிழமை முடிவு எடுக்கப்படவிருக்கிறது.

புகையிரத பயணச்சீட்டு விலை அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) புகையிரத தொழிற்சங்கங்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என தமது சங்கம் எழுத்து மூலம் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

புகையிரதக் கட்டணத்தை அதிகரிக்காமல் திணைக்களத்தின் வருவாயை அதிகரிக்கக்கூடிய ஒரு வழிமுறையை தமது தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.

புகையிரதத்தை முறையாக இயக்குவதன் மூலம் திணைக்களத்திற்கு ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் என சுமேத சோமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!